Sunday, April 29, 2007

சந்தேகமாம் சந்தேகம்...

காலையில் டி.வியில் சேனல் மாற்றிக் கொண்டு இருந்த போது, உன்னாலே உன்னாலே திரைப்பட காட்சியை காண நேரிட்டது... ஹிரோ, ஹிரோயின் மற்றும் பலர் அமர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, யாரோ ஒரு பெண், பெண்களிடம் உனக்கு பிடிக்காதது எது என்று கேட்க, ஹிரோ, பெண்கள் ஒரு சந்தேக புத்திகாரர்கள் எனவும், தன்னை தவிர பிற பெண்களிடம் பேசினால் சண்டை இடுவார்கள் என்றும் மேலும் பல dialogue விட்டுக்கொண்டு இருந்தார்...

உள்ளெ ஒரு குரல், சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, அடக்கமாக இருப்பது போன்ற பெண்களுக்க்கான இலக்கணம் தான் ஒன்றுமே நமக்கு இல்லையே இதுவாவது உள்ளதா என்று பார்த்தால், சுத்தம், சந்தேகமாவது மண்ணாவது, என் கணவர் யாரிடம் பேசினாலும், சிரித்தாலும், நம்ம தினமும் சகிக்கறதை இந்த பெண் ஒரு மணி நேரம் தானே தாங்க போறா, என்ற பரிதாபம் தான் மிஞ்கிறது... அதுக்கும் மேல நம்ம விளங்காத மூஞ்சியைத்தான் எவ்வளவுதான் அவரும் எவ்வளவு நாள்தான் பார்க்கறது, ஒரு நாள் இந்த மாதிரி enjoy தான் பண்ணட்டுமே என்ற ஒரு உண்மை வேற உறுத்தரதால, நாங்க இருவரும் சேர்ந்து வெளியே போகும் போது, யாராவது அழகான பெண்களை பார்த்தால், நானே அவருக்கு காண்பித்து, இரண்டு பேரும் சேர்ந்து ஜொல்லு விடுகிற அற்புதமான குடும்பம் எங்களோடது...

திரைப்பட காட்சி முடிஞ்ச உடனே, வெங்கட் (எங்க ஆபிஸ்ல இவருக்கு பட்ட பேரு தியாகி) கிட்ட, எனக்கு ஏங்க இந்த மாதிரி feeling எல்லாம் வர மாட்டேங்குது, என்று கேட்டதற்கு, உனக்கு ஒரு திமிரு, உன்னை தவிர என் மூஞ்சியை யாரும் பார்க்க மாட்டாங்க என்பதில் பயங்கர confident அ இருக்கற ஆணவத்தில் இந்த பேச்சு பேசற... எல்லாம் என் கேடுகாலம், சூப்பரா இருக்கற நான் சுமார இருக்கற உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலத்தை தள்ளனும் என்று இருக்கு என்று அவர் சுய பிரதாபத்தை எடுத்து விட ஆரம்பித்தார்...

அடடா இந்த பிளேடு டயலாக்களை கேட்பதற்க்கு இவரை சந்தேக படுவதே மேல் என்று என் முறைத்த பார்வை சொல்லாமல் சொல்லியதால் மனுஷர் கப்சிப்.

ஜெயா.