இப்படி எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்??
1. மூக்கு பிடிக்க ஒரு அறுசுவை விருந்து ஒரு வேளை சாப்பிட்டால் அடுத்த இரு நாட்களுக்கு பசிக்காத வயிறு....
2. ஒரு நாள் சமைத்த உணவு கெடாமல் எல்லா நாளும் வளர்ந்து வரும் பாத்திரங்கள்...
3. ஒரு முறை fill செய்தால் தீரவே தீராத பெட்ரோல் டேங்க் கொண்ட கார்...
4. ஒரு முறை மாற்றினால் வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய சமையல் காஸ்...
5. முதல் மாத வாடகைக்கு அப்புறமாக வாடகையே கேட்காத வீட்டு சொந்தகாரர்...
6. எத்தனை முறை அணிந்தாலும் புது கருக்கு மாறாத ஆடைகள்...
7. செய்த தவறை திரும்ப சென்று திருத்திக் கொள்ளக்கூடிய கால கடிகாரம்...
8. அயல் நாட்டில் இருக்கும் ஆருயிர் தோழியை நினைத்த உடனே சென்று சந்திக்க கூடிய தனி போக்குவரத்து சாதனம்...
9. அனைத்தை விட முக்கியமாக, வீட்டின் பின்புறத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை காய்க்கும் ஒரு பணம் காயச்சி மரம்....
ஆசைகளுக்கு ஏது அணை??
ஜெயா.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஜெயா,
இவ்வளவு பேராசை கூடாது.
எனக்கு உங்கள் அளவெல்லாம் பெரிய லிஸ்ட் கிடையாது. அந்த பணம் காய்ச்சி மரம் மட்டும் போதும். மற்றதையெல்லாம் சமாளித்துக்கொள்வேன் ;)
என்னுடையது பேராசை என்றால், உம்முடையது என்னவோ??
சரி போனால் போகிறீர்கள் என்று என் ஆசைகள் நிறைவேறும் நாள் அன்று, ஒரு நாளுக்கு உங்களுக்கு அந்த மரத்தை வாடகைக்கு தருகின்றேன், என் பதிவிற்கு வந்து பின்னூட்டம் அளித்தமைக்காக :)
ஜெயா.
Post a Comment