Thursday, June 28, 2007

இது ஒரு காதல் கதை

என்னுடைய தோழி, ரொம்பவும் நெருங்கியவள், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள் (நம் அளவிற்க்கு இல்லை என்று வைத்துகொள்ளுங்களேன்) பழகுவதற்க்கும் மிகவும் இனிமையானவள், காலேஜ் நாட்களிலேயே இவளை அனைவருக்கும் பிடிக்கும், ஒரு கதையின் கதாநாயகி போல் இருப்பாள்.

காலேஜ் முடிந்து வேலைக்கு சேர்ந்த போது, என் தோழி ஒரு பெரிய நிறுவனத்தில் software engineer ஆக பணியில் அமர்ந்தாள். கூடவே ஒரு பையனும் சேர்ந்தான். ஒரே டீம். நாட்கள் செல்ல, நல்ல நன்பர்கள் ஆகினர். நல்ல பையன், நல்ல படிப்பு, நல்ல வேலை, தோழிக்கு நட்பிற்க்கு மேல் ஒரு படி செல்ல ஆசையாக இருந்த்து.

பையனின் அப்பா அம்மா வெளி ஊரிலே இருந்த்தால் பாட்டியிடம் வளர்ந்த பையன். மிகவும் உலகம் தெரியாமல் வளர்த்து வைத்து இருந்த்தனர். வீடு, வீடு விட்டால் ஆபீஸ், இடையில் இருக்கும் எதுவும் அவன் கண்ணுக்கு தெரியாது.
பீச், spenscers, சினிமா, பெண்கள், எல்லாம் அவனைப் பொருத்தவரை நிலவில் கூட இல்லை அதை விட தூர கிரஹத்தில் உள்ளதாக நினைப்பு.
எங்களுக்குகோ அதற்க்கு இடையில் இருக்கும் விஷயம் மட்டும் தான் தெரியும். அம்மா கொண்டு என்று கேள்விப் பட்டு இருப்பீர்கள், பாட்டி கோண்டு வாக நாங்கள் முதலில் அவனைத்தான் பார்த்தோம்...

காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்லுவோம், இட்டிலி அல்லது தோசை என்று, அவனுடய டிபிக்கல் பதில் வந்து, பாட்டி இன்னைக்கு இட்டிலி செய்தா, அதைதான் சாப்பிட்டேன். பாட்டிக்கு இருக்கின்ற importance இட்டிலிக்கு இருக்காது. நாளைக்கு என்ன பிளான் என்றால், பாட்டி மாமா வீட்டுக்கு கூட்டிக்கு போக சொல்லி இருக்காங்க, அங்கே போகனும் என்பான்.

ஆனால் என்ன செய்வது, crush க்குத்தான் கண்ணில்லையே, என் தோழிக்கு அவனை மிகவும் பிடித்து இருக்கவே, சரி நாம் டிரை பண்ணிப்பார்ப்போம் என்று முடிவு பண்ணினோம். மணிக்கனக்காக உட்கார்ந்து சேட் செய்வாள் என் தோழி, அவன் வீட்டில் பூத்த பூவிலிருந்து, அவன் பாட்டியின் வெட்டி கதைகளிலிருந்து, அவன் தங்கைக்கு பிடித்த சினிமா நடிகைகளிலிருந்து, அவனுக்கு பிடித்த்ச் விஷயங்கள் உட்பட, ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கேட்டுக் கொள்ளுவாள், அதைப்போல தன்னை பற்றியும் சொல்லுவாள். முடிவில் அவன், "நான் கடவுளிக்கு நன்றி சொல்ல வேண்டும், உன் போல ஒரு friend கிடைத்தற்க்கு" ஒரு பல்ப் குடுப்பான். "அடப்பாவி எந்த ஊரிலடா உனக்கு ஒரு friend ஒரு உப்பு சப்பில்லாத கதையை ராத்திரி ஒரு மணிக்கு கேட்பாள், கொஞ்மாவது மூளையை உபயோகியேண்டா" என்று சத்தமாய் கேட்க தோன்றும்.

அந்த கொடுமைக்கு மேலாக, அவன் படித்ததும் ஒரு நல்ல கல்லூரி, அங்கே ஒரு பெண், இருவரும் காதலித்தார்களா என்பது நினைவு இல்லை ஆனால் ஏதோ காரணத்திற்க்காக பிரிந்தது மட்டும் நினைவு இருக்கிறது (அந்த பெண்ணை தேடி எப்படி இவனை கவர்ந்தாள் என்று டியுஷனுக்கு போகனும் என்று நானும் தோழியும் ரொம்ப ஆசைப்பட்டோம்). அந்த பெண்ணின் கதைகளை வேறு, சொல்லுவான், நான் இதை யாரிடம் சொல்லுவேன் உன்னை தவிர என்ற டயலாக் வேறு..

ஒரு நாள் அவன் வீட்டிற்க்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அழையா விருந்தாளியாக, எப்படி செல்வது, ஆனாலும் அந்த பாட்டியம்மாவை போய் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல், ஆவல் என்பதை விட வெறி என்று சொல்லலாம். வீடு தெரியாது, வீடு இருக்கிற ஏரியா தெரியும். வீட்டை கண்டு பிடிக்க ஒரு யோசனை செய்தோம். அவனை வீட்டுக்கு சாப்பிட அழைத்தோம். சாப்பிட்டு அவனுக்கு bye சொல்லி விட்டு அவனையே வண்டியில் follow செய்தோம். அவன் வீடு இருக்கும் தெருவிற்க்கு சென்று அவன் திரும்பவும், நாங்களும் திரும்பினோம். அவன் வீட்டுக்கு அருகில் மெதுவாக செல்ல வண்டியை விட்டு கிழே இறங்க பிரயத்தனம் செய்ய, அப்போது தான் நாங்கள் பார்த்தோம், அது ஆள் நடமாட்டமில்லாத ஆழ்வார்பேட்டை தெரு, திரும்பினால் நாங்கள் பின் வருவது தெரிந்து விடும் என்று... அப்படியே வண்டியை விட்டு இறங்கி, இஞ்சினைக் கூட off செய்யாமல், பக்கத்தில் பச்சை கலர் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி இருக்க, அதன் பின்னே ஒளிந்து மறைந்து கொண்டோம், துப்பட்டாவினை தலையில் போட்டுக் கொண்டோம், முழுக்க மறைவதற்க்காக... ஆமாம் இவனுக்கு சத்திய்மாக வந்த பாதையினை திரும்பி பார்க்கன்ற அளவிற்க்கு சாமர்த்தியம் பத்தாது என்று சர்வ நிச்சயமாக தெரிந்தாலும், தெரிந்தால் மானம் போய்விடுமே என்ற காரணத்திற்காக ஒளிந்து கொண்டோம்.

அவன் வீட்டுக்கு கொஞ்சம் அருகில் அதே அலுவலகத்தில் வேலை செய்கின்ற இன்னொரு நன்பன் வீடும் இருக்கவே, அவன் வீட்டுக்கு செல்லும் சாக்கிட்டு சென்றோம். முதல் நன்பனுக்கே எங்களை பார்த்தவுடன் அதிர்ச்சி, என்னடா இது, இந்த் அறுந்த வால்கள் வேளை கெட்ட வேலையில், இங்கே வந்து இருக்கிறார்களே என்று. சாஸ்திரத்து ஒரு 5 நிமிடம் அவன் வீட்டில் இருந்து விட்டு, ஐந்தாம் நிமிடம், நம்ம தலைவரின் வீட்டிற்க்கு கிளம்பினோம்.

வீட்டிற்க்கு போவதா வேண்டாமா என்று பயங்கர யோசனை... சரி முன் வைத்த scooty யை பின் வைக்க வேண்டாம் என்று இறங்கினோம். பாட்டியும் பேரனும் எங்களுக்கு பயங்கர வரவேற்பு. பாட்டியின் reaction ஐ பார்த்த வுடனே தெரிந்தது, பெண்கள் அவர்கள் வீட்டிற்க்கு வருவது இதுதான் முதல் தரம் என்று. முதலில் சென்ற நன்பன் வீட்டிற்க்கு செல்லவே வந்த்தாக சாதித்தோம். தோழி கண்ணில் பொறி இருந்த்தால், பாட்டியை பொறாமையினாலே எரித்து இருப்பாள். கொஞ்ச நேரம் உக்கார்ந்து கடலை போட்டு விட்டு, வீட்டிற்க்கு வந்தோம். ஒரு பாட்டி எங்கள் வாழ்க்கையில் ஒரு வில்லியாக வருவார்கள் என்று நாங்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இப்படி அழையா விருந்தாளியாக ஒரு வீட்டிற்க்கு திடுதிடு திப் என்று நுழைந்தது, மறக்க முடியாத அனுபவம்... தோழியின் காதலுக்காக இது கூட செய்யா விட்டால் எப்படி?

அந்த வருடத்தின் காதலர் தினம் வந்த போது, நான் தான் ஒரு யோசனை சொன்னேன். அதன் படி, நான் அவனுக்கு காலங்காலர்தால 6.30 மணிக்கு போன் பண்ணி, குசலம் எல்லாம் விசாரித்து விட்டு, காதலர் தின வாழ்த்து தெரிவித்து விட்டு, நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கிலி தொடராக வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்றோம், எனக்கு என்னுடைய தோழி செய்தாள், நான் உனக்கு சொல்லுகின்றேன், நீ உனக்கு மனதுக்கு பிடித்தவளுக்கு சொல், என்று என் தோழியின் பெயரை வாய் விட்டு சொல்லாத குறையாக சொல்லி வைத்தேன். அடுத்த நிமிடமே என் தோழிக்கு கால் செய்து பிளான் சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டு, சத்தியமாக நான் அவ்வளவு உணர்ச்சி பூர்வமாக பேசியதை பார்த்து நான் தான் அவனை காதலிக்கின்றேன் என்று நினைப்பதற்க்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது என்று புலம்பிக் கொண்டு இருந்தேன். என் தோழிக்கு போன் செய்து இருந்தான் என்றால் இந்த பதிவின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்... யாருக்கு சொன்னான் என்று திரும்ப நானே கேட்டால் ரொம்ப அசிங்கமாக இருக்கும் என்று கேட்காததால் அந்த விளக்கெண்ணய் யாருக்கு சொன்னான் என்று எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை...

ஜாடைமாடையாக செயத விஷயம் எல்லாம், அவனை தவிர அலுவலக்க்தில் வேலை செய்யும் அனைவருக்கும் புரிந்தது. அலுவலத்தில் பல பேர் தோழிக்கு விண்ணப்பம் போட்டு இருந்த்து வேறு ஒரு வயித்தெரிச்சல். நேரிலோ சொல்வதற்க்கு தோழிக்கு தைரியம் இல்லை. நானாவது கேட்டு சொல்லுகின்றேன் என்றால், அதற்க்கும் என் தோழி வேண்டாம் என்று சொல்லி விடுவாள். நாம் கேட்டு, அவன் பாட்டியிடம் கேட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடும் ஜெயா, என்று தடுத்து விடுவாள். அவனையும் அவன் தோழர்களை மட்டும் அழைத்து விருந்து எல்லாம் கொடுத்து இருக்கிறோம், இருவரும் தனியாக பேசுவதற்க்கு நிறைய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம், ஆனால் அந்த spark அவனுக்கு வரவே இல்லை...

ஒரு வருடத்திற்க்கு ஒரு கம்பெனி என்ற பாலிசியில் அவன் கம்பெனி மாறி சென்று விட்டான், தோழியும் புது இடம் சென்று விட்டாள். தோழியும் இவன் பாட்டி பைத்தியத்தை நம்மால் சமாளிக்க முடியாது, மற்றும், தானாக தோன்றாதை நாம் கட்டாயப் படுத்தி செய்து, அப்புறம் வாழ்நாள் முழுசுக்கும் கஷ்டபடுவ்தாக வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்று, crush தூக்கி மூட்டை கட்டி பரனையில் போட்டு விட்டாள். ஆனாலும் எனக்குள் சீ இந்த பையன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் ஒரு அருமையான பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருந்து இருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு குறைவதாக இல்லை.

இப்போதும், சேட்டில் வந்தால் அவன் டயலாக் மாறுவதே இல்லை, i should thank god for giving such friends...

ஜெயா.

9 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஜெயா,
இதுவும் பத்து வருசம் முன்ன நடந்த கதையா? என்னவோ கண் முன்ன நடந்ததை எழுதுவது போல எழுதிருக்கீங்க.. எனக்கு கூட என் பழைய நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருது.. ;) கொஞ்ச நாளில் நானும் கொசுவர்த்தி சுத்த தொடங்கிடுவேன்னு நினைக்கிறேன்

ஜெயா said...

ஆமாம் பொன்ஸ், இது வந்து 2000 ல நடந்தது. 7 வருஷம் ஆச்சு. என் தோழி கிட்டே சொல்லி படிக்க சொன்னேன். அவ வந்து நான் மறந்து போன இரண்டு முக்கியமான மேட்டர் சொல்லி அதையும் சேர்க்க சொன்னதால் எடிட் செய்து இருக்கிற போஸ்டை திரும்ப படியுங்க :)

ஜெயா.

Anonymous said...

நல்ல தெளிவான குழப்பாத விவரணையோடு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ஜெயா said...

பாராட்டுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சிவா. நாங்க பண்ணின முயற்சிகளை ரொம்ப சுருக்கமா எழுதி இருக்கேன், சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்ல எங்களுக்கு ஒரு வருஷம் ஆச்சு... ஒரு வருஷமாக அடிச்ச லூட்டி கொஞ்சமா நஞ்சமா...

ஜெயா.

zenith_nadir said...

nice post. sema comedyah irukku..

and i read ur other postings too. keep writing.

wish u all the best.

cheers

ajay

ஜெயா said...

thanks ajay, ippo ninaicha engallukkum thaan comedya irukku, anaa appo room pottu azhuvaatha kuraiyaa feel panninom :)

Jaya.

யோசிப்பவர் said...

இது என்ன பெரிய அநியாயமாக இருக்கிறது? ஒரு பையன் நல்லவனாக இருந்தால் கூட தப்பா? எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? ;-))

ஆனாலும் நன்றாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள்!

யோசிப்பவர் said...

எழுத்துப் பிழைகள் கொஞ்சம் அதிகமாயிருக்கே! கொஞ்சம் கவனிக்கலாமே!

பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யவில்லையா?

Anonymous said...

this is really good.. keep writing..